கிருஷ்ணகிரி

ஒசூரில் 8 இல் விநாயகர் சிலை ஊர்வலம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி. ஆய்வு

4th Sep 2019 09:31 AM

ADVERTISEMENT

ஒசூரில் செப். 8-ஆம் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி.பிரதீப்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 ஒசூரில் விநாயகர் சதுர்த்தி விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 100- க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். இந்த விநாயகர் சிலைகள் வருகிற செப்.8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சந்திராம்பிகை ஏரி மற்றும் கெலவரப்பள்ளி அணைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த நிலையில் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதை, சிலைகளை கரைக்க உள்ள இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பாதை மற்றும் சிலைகளைக் கரைக்க கூடிய ஏரிகளை பார்வையிட்டுள்ளேன். விநாயகர் சிலை ஊர்வலத்தை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்திட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒசூரில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் கூடுதலாக போலீஸாரை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், ஒசூர் டி.எஸ்.பி. மீனாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT