கிருஷ்ணகிரி

எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கழுத்து அறுத்துக் கொலை

4th Sep 2019 09:31 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியில் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டார். மேலும், கொலையைத் தடுக்க முயன்ற இருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
 தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள பாப்பாரப்பட்டி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி மகன் ராஜா (45). இவர் பாப்பாரப்பட்டி கடைவீதியில் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் கடை வைத்திருந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கடைக்கு சென்று விட்டு இரவு சுமார் 9.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு ராஜா வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகில் சென்ற ராஜாவை மர்ம நபர்கள் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தனர். இதனைக் கண்ட தடுக்க முயன்ற பக்கத்து வீட்டைச் சேர்ந்த பச்சமுத்து மனைவி சத்துணவு அமைப்பாளர் திலகவதி (41) , அவரது மகன் கௌதம் ஆகியோரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். இந்தச் சம்பவத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
 இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில் பாப்பாரப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த திலகவதி, கௌதம் ஆகியோர் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT