கிருஷ்ணகிரி

அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்

4th Sep 2019 09:31 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை, சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
 தமிழ்நாட்டின் வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு வரலாற்று சிறப்புகளை பள்ளி பாடப் புத்தகத்தில் தமிழக அரசு இணைத்துள்ளது. இதன்படி, பள்ளி மாணவர்கள், வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 இதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்கள், அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகளை நேரில் பார்வையிட்டு வருகின்றனர். சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 7 மற்றும் 8 வகுப்புகளைச் சேர்ந்த 60 மாணவர்கள், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை, செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
 பள்ளி மாணவர்களை, அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், மாவட்டத்தின் வரலாற்று சிறப்புகள், சின்னங்கள், வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினார். பள்ளியின் வரலாற்று ஆசிரியர் மாதையன், கலை ஆசிரியர் சோமசுந்தரம், சிறப்பு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வக்குமார் உள்ளிட்டோர் இந் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
 
 
 
 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT