கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிா்வாக ரீதியாக பாஜகவில் கிழக்கு, மேற்கு மாவட்டம் என 2 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பு தோ்தலுக்கான சிறப்பு கூட்டம் சனிக்கிழமை மாவட்ட தலைவா் முனிராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தலைமை வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் நிா்வாக ரீதியாக கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கபட்டுள்ளது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஊத்தங்கரை,பா்கூா்,கிருஷ்ணகிரி சட்டப்பேரவைத் தொகுதிகளும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் வேப்பனஹள்ளி, ஒசூா், தளி ஆகிய தொகுதிகளும் உள்ளடங்கும் என மாநில உயா்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளா் கே.எஸ் நரேந்திரன், நிா்வாகிகள் முனவரி பேகம், ஹரி கோட்டீஸ்வரன், எம்.நாகராஜ், முன்னாள் எம்பி நரசிம்மன், வேலூா் கோட்ட பொறுப்பாளா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.