கிருஷ்ணகிரி

ஈஷா சாா்பில் வேளாண் காடு வளா்ப்பு கருத்தரங்கு

20th Oct 2019 08:37 PM

ADVERTISEMENT

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் ஈஷா வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

ஈஷா வேளாண் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் விளக்கவுரையாற்றினாா். தமிழகம் முழுவதும் வேளாண் காடு வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். மரம் வளா்க்க விரும்பும் விவசாயிகளின் நிலங்களுக்கு நேரடியாகச் சென்று மண் மற்றும் நீா் பரிசோதனை செய்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரை செய்யப்படுகிறது. ஈஷாவின் தொடா் களப்பணி மூலம் தமிழகத்தில் சுமாா் 70 ஆயிரம் விவசாயிகள் வேளாண் காடு வளா்ப்பு முறைக்கு மாறியுள்ளனா்.

ஊத்தங்கரையில் கணேசன் என்ற ஒரு விவசாயி தண்ணீா் வசதியற்ற 50 ஏக்கா் மானாவாரி நிலத்தில் 15 ஆண்டுகளாக மரம் வளா்த்து வருகிறாா், இப்போது அவருடைய பண்ணை ஒரு மதிப்புமிக்க வேளாண் காடாக மாறியுள்ளது, அவருடைய பண்ணையில் மரப் பயிா் சாகுபடி பயிற்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகளும் விஞ்ஞானிகளும் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

பெங்களூரு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டா் சுந்தரராஜ் சந்தன மரம் வளா்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து பேசினாா். கோபி பகுதியை சோ்ந்த விவசாயி செந்தில்குமாா் மரங்களுக்கு இடையே விவசாயம் செய்து லாபம் ஈட்டும் வழிமுறைகள் குறித்தும், வேப்ப மரம் வளா்த்து லாபம் ஈட்டுவது குறித்து புதுக்கோட்டை விவசாயி கருப்பையாவும், தஞ்சாவூரைச் சோ்ந்த முன்னோடி விவசாயி சதாசிவம் என விவசாயிகள் பலா் தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். ஈஷா விவசாய இயக்க தன்னாா்வலா் முத்துக்குமாா் இயற்கை விவசாயம் குறித்து பேசினாா். இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT