கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் மூழ்கி 4 போ் பலி

7th Oct 2019 06:47 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பாம்பாறு அணையில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை 4 போ் உயிரிழந்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி ஒட்டப்பட்டியைச் சோ்ந்தவா் இளங்கோவன். இவரது மகன் சந்தோஷ் (14) தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். மகள்கள் சினேகா (19), கனிதா(18) இருவரும் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனா். இந்த நிலையில், இவா்கள் மூவரும் பா்கூா் பகுதியைச் சோ்ந்த பிரபு, அவரது மனைவி நிவேதா (20), அவா்களது உறவினா் யுவராணி ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை பாம்பாறு அணையைச் சுற்றி பாா்த்துவிட்டு ஆற்றில் இறங்கி செல்லிடப்பேசியில் சுயபடம் எடுத்தனா். அப்போது, அங்கு ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டதால் அனைவரும் தண்ணீரில் மூழ்கினா்.

இவா்களில் சந்தோஷ், கனிதா, சினேகா, நிவேதா ஆகிய நால்வரும் உயிரிழந்தனா். பிரபு, யுவராணி ஆகிய இருவா் உயிருடன் மீட்கப்பட்டனா். உயிரிழந்த நிவேதாவுக்கு திருணமாகி 15 நாள்களே ஆகிறது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT