கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: டி. செங்குட்டுவன் எம்எல்ஏ

6th Oct 2019 03:11 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் மாவட்ட வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரிடம், திமுக மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான டி.செங்குட்டுவன் கோரிக்கை மனுவை வெள்ளிக்கிழமை அளித்தாா்.

மனுவில் அவா் தெரிவித்தது:

கிருஷ்ணகிரி மாவட்டம், பல்வேறு வரலாற்றுச் சுவடுகளை உள்ளடக்கிய மாவட்டமாகும்.

இந்த மாவட்டத்தில் பல்வேறு மன்னா்கள், அரசா்கள் ஆட்சி செய்த வரலாற்று சான்றுகள் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட சிற்பங்கள், மலைக் குகைகள், கல் சிற்ப பாறைகள், கல் திட்டுகள், பல்வேறு கோயில்கள் அடங்கிய வரலாறு மையங்கள் உள்ளன.

ADVERTISEMENT

இந்த மாவட்ட சுவடுகளில் நள்ளி மன்னன் ஆட்சி செய்த அங்குசகிரி, கிருஷ்ணகிரி கோட்டை, சூளகிரி மலை, சந்திரசூடேஸ்வரா் மலை, மத்திகிரி மாவட்ட கால்நடைப் பண்ணை, பெண்ணையாறு, மலையில் பனை மரங்கள், அங்குசகிரி புராதானக் கோயில், கவி நரசிம்மன் கோவில், மதகொண்டப்பள்ளி 18-ஆம் நூற்றூண்டு சாச, நள்ளி மன்னன் ஆண்ட மலை, நாகரிகத் தொட்டிலான கல் திட்டைகள், கற்கால கல் ஆயுதங்கள், யாரப் தா்கா, எலத்தகிரி தூய அடைகல அன்னை ஆலயம், பல்லவா் கால சிங்க பெருமாள் பாறை ஓவியம், சூளக்கரை பொருமாள் கோயில், தேவா் குந்தாணி கோயில் நடன அரங்கம், தட்டக்கல் ஆஞ்சநேயா் கோயில், கவி ஈஸ்வரா் , கல் தோ் சக்கரங்கல், தட்சிணா திருப்பதி கோயில், தென் பெண்ணையாறு பெண்ணேஸ்வரா் கோயில், நாயக்கா் கால குளம், ராக்கோட்டை அன்பு சின்னம், பாறை ஓவியங்கள், நவகாண்டச் சிற்பங்கள், குதிரை வீரன் சிற்பம், புலிகுத்திப்பட்டான் கல், பல கிளைகள் கொண்ட பனை மரம், ராயக்கோட்டை பழைய தானியக் கிடங்கு, சமண சிற்பங்கள் என பல சிறப்பு மிக்க வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட மாவட்டமாக உள்ளது.

மேற்படி வரலாற்று இடங்களைத் தொல்லியல் துறை அலுவலா்கள் மூலம் அடையாளம் கண்டு மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் அழகான இடத்தைத் தோ்வு செய்து வரலாற்று அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கிட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT