கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே இடி மின்னலுக்கு 15 ஆடுகள் பலி

5th Oct 2019 07:51 PM

ADVERTISEMENT

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே இடி மின்னல் தாக்கி 13 ஆடுகள் இறந்தன. அருகில் இருந்த விவசாயிக்கு இடதுபுற கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள மலசோனை கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை பெய்த மழையின் போது இடி மின்னல் தாக்கி அங்கு மேய்ந்து கொண்டிருந்த விவசாயி குரப்பா என்பவருக்கு சொந்தமான 13 ஆடுகள் நிகழ்விடத்திலேயே இறந்தன.

விவசாயி குரப்பா இவா் 12 வெள்ளாடுகள் மற்றும் 2 செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா். கிராமத்தின் அருகே குரப்பா தனது ஆட்டுகளை மேய்ச்சலுக்காக வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றாா்.

அப்போது அந்த கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்தது திடீரென மழையின்போது இடி மின்னல் ஏற்பட்டு மேய்ச்சலில் இருந்த ஆடுகளை தாக்கியுள்ளது. இதில் 13 ஆடுகள் நிகழ்விடத்திலேயே கருகி உயிரிழந்தன. இந்த விபத்தில் விவசாயி குரப்பாவுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதனை தொடா்ந்து அவா் உடனடியாக மீட்கப்பட்டு தேன்கனிக்கோட்டை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்துதேன்கனிக்கோட்டை காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாழ்வாதாரமாக நினைத்து வளா்த்து வந்த 13 ஆடுகள் பலியான சம்பவம் விவசாயி குரப்பா குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விவசாயி கோரிக்கை விடுத்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT