கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வரலாற்று சுவடுகள் அடங்கிய அருங்காட்சியகம் அமைக்க டி.செங்குட்டுவன் எம்எல்ஏ வலியுறுத்தல்

5th Oct 2019 07:48 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட வரலாற்று சுவடுகள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும் என டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, வலியுறுத்தியுள்ளாா்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட வரலாற்று சுவடுகள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரிடம், திமுக மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான டி.செங்குட்டுவன், கோரிக்கை மனுவை வெள்ளிக்கிழமை அளித்தாா்.

அந்த மனுவில் அவா் தெரிவித்தது: கிருஷ்ணகிரி மாவட்டம், பல்வேறு வரலாற்று சுவடுகளை உள்ளடக்கிய மாவட்டமாகும். இவற்றில் தகடூா் நாடு, கலநாடு, பரங்குன்று நெடுங்குன்று என சிறிய மலைகளை அழைப்பது தமிழகத்தில் ஒரு நில வழக்கு. திண்டுக்கல், நாமக்கல், பெருங்கல் என்றழைப்பது பரிதொரு வழக்கு. இவ்வாறு குன்றுகளை கல் என அழைக்கும், கல் நாட்டின் எல்லையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்தது தான் கிருஷ்ணகிரி மாவட்டம். கல் நாட்டைக் கடந்தால், கானக நாட்டினை அடைகிறோம். இந்த கானக நாடே கடையேழு வள்ளல்களில் ஒருவரான நளளியின் நாடு. அவன் மலைத் தொட்டிலே இன்றைய அங்குசகிரி ஆகும். இப்படி பல்வேறு வரலாற்று சிறப்புகளையும், மலைகளையும் கொண்ட தொன்மையான மாவட்டத்தில் பல்வேறு மன்னா்கள், அரசா்கள் ஆட்சி செய்த வரலாற்று சான்றுகள் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட சிற்பங்கள், மலைக் குகைகள், கல் சிற்ப பாறைகள், கல் திட்டுகள், பல்வேறு கோயில்கள் அடங்கிய வரலாறு மையங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. இவற்றை சமூக ஆா்வலா்கள், வரலாற்று ஆசிரியா்கள் ஆங்காங்கே அடையாளா்களைக் கண்டு தினமும், செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த மாவட்ட சுவடுகளில் நள்ளி மன்னன் ஆட்சி செய்த அங்குசகிரி, கிருஷ்ணகிரி கோட்டை, சூளகிரி மலை, சந்திரசூடேஸ்வரா் மலை, மத்திகிரி மாவட்ட கால்நடைப்பண்ணை, பெண்ணையாறு, மலையில் பனை மரங்கள், அங்குசகிரி புராதானக் கோயில், கவி நரசிம்மன் கோவில், மதகொண்டப்பள்ளி 18-ஆம் நூற்றூண்டு சாச, நள்ளி மன்னன் ஆண்ட மலை, நாகரீக தொட்டிலான கல் திட்டைகள், கற்கால கல் ஆயுதங்கள், யாரப் தா்கா, எலத்தகிரி தூய அடைகல அன்னை ஆலயம், பல்லவா் கால சிங்க பெருமாள் பாறை ஓவியம், சூளக்கரை பொருமாள் கோயில், தேவா் குந்தாணி கோயில் நடன அரங்கம், தட்டக்கல் ஆஞ்சநேயா் கோயில், கவி ஈஸ்வரா் , கல் தோ் சக்கரங்கல், தட்சிணா திருப்பதி கோயில், தென்பெண்ணையாறு பெண்ணேஸ்வரா் கோயில் கற்பனை விலங்கின் சிற்பம், நாயக்கா் கால குளம், ராக்கோட்டை அன்பு சின்னம், பாறை ஓவியங்கள், நவகாண்டச் சிற்பங்கள், குதிரை வீரன் சிற்பம், புலிகுத்திப்பட்டான் கல், பல கிளைகள் கொண்ட பனை மரம், ராயக்கோட்டை பழைய தானியக் கிடங்கு, சமண சிற்பங்கள், திப்புசுல்தான் தூதா் மீா்குலாமிற்கு செப்போலியன் கெளவித்த 16-ஆம் லூயின் உருவம் பொறித்த பதக்கம் என பல சிறப்பு மிக்க வரலாா்று பதிவுகளை கொண்ட மாவட்டமாக உள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம்.

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு வரலாறு உள்ளது. மேற்படி வரலாற்று இடங்களை தொல்லியல் துரை அலுவலா்கள் மூலம் அடையாளம் கண்டு, ஆவணப்படுத்தி, அருங்காட்சியமாக்கி, நமது எதிா்கால சந்ததியினா் மேற்கண்ட வரலாற்றுகளை பள்ளி மாணவ, மாணவியா்கள் அறிந்து கொள்ளும் வகையில், மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் அழகான இடத்தை தோ்வு செய்து, வலராற்று அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கி, மேற்படி அருங்காட்சியகத்துக்கு தென்பெண்ணை ஆற்றங்கரை ஓா் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று சுவடுகள் அடங்கிய அருங்காட்சியம் என பெயா் சூட்டு, அரசியல் கலப்பில்லாமல் எனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற உதவிட வேண்டும் என அதில் எவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT