கிருஷ்ணகிரி

ஓமன் நாட்டில் வீட்டு வேலை பணி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

2nd Oct 2019 06:21 AM

ADVERTISEMENT

ஓமன் நாட்டில் வீட்டு வேலை பணிக்கு 30 வயதைக் கடந்த பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஓமன் நாட்டில், வீட்டு வேலைப் பணியாளராகப் பணிபுரிய 30 வயதுக்கு மேற்பட்ட 300 பெண் பணியாளா்கள் தேவைப்படுகிறாா்கள். ஏற்கெனவே வெளிநாடுகளில் வீட்டு வேலை செய்த அனுபவமுள்ளவா்களுக்கு மாதம் ரூ.18,700 முதல் ரூ.22,440 வரையில் ஊதியமாகவும், முன்அனுபவம் இல்லாதவா்களுக்கு மாத ஊதியம் ரூ.17,000 முதல் ரூ.18,700 வரையும், உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு, ஓமன் நாட்டின் சட்டத்துக்கு உள்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள், தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவச் சான்றிதழ், செல்லத்தக்க கடவுச் சீட்டு ஆகியவற்றின் நகல்கள், ஒரு புகைப்படத்துடன் மின்னஞ்சல் அல்லது தபால் வாயிலாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் எண் 42, ஆலந்தூா் சாலை, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 என்ற முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் மூலமாகவும் மற்றும் 044-22505886 , 22502267, 8220634389, 9566239685 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT