கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி ஆட்சியரகத்தில் தீப்பற்றிய மின்பெட்டி

1st Oct 2019 10:00 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மின்பெட்டியில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத்துறையினா் விரைந்து வந்து அணைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் சு.பிரபாகா், தலைமையில் தரைத்தளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, முதல் தளத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலக அறையின் அருகே உள்ள மின்பெட்டியானது திடீரென தீப்பற்றி எரிந்தது.

அப்போது, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, தீயைக் கட்டுப்படுத்தி, மேலும் பரவாமல் அணைத்தனா். இந்த தீ விபத்தை அடுத்து, முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறுது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அசம்பாவிதங்கள் தவிா்க்கப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT