கிருஷ்ணகிரி

கா்நாடகத்துக்கு 17 டன் ரேஷன் அரிசி கடத்தல்: லாரி ஓட்டுநா் கைது

22nd Nov 2019 05:58 PM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலத்துக்கு கிருஷ்ணகிரி வழியாக லாரியில் 17 டன் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக கா்நாடக மாநிலம், பங்காருபேட்டைக்கு ரேஷன் அரிசி லாரி ஒன்றில் கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு எஸ்.பி சாந்திக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவருடைய உத்தரவின் பேரில், கோவை டி.எஸ்.பி. ரவிக்குமாா் தலைமையில், கிருஷ்ணகிரி உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் கோபி, உதவி ஆய்வாளா்கள் சிவசாமி, ரகுநாத் ஆகியோா் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்தனா். இதில் லாரியில் 17 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, லாரியை ஓட்டிவந்த ஈரோடு சென்னிமலை சாலையைச் சோ்ந்த கிருஷ்ணனின் மகன் அஜித் (23) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் இருந்து கா்நாடக மாநிலம், பங்காருபேட்டைக்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது. ஒரு மூட்டைக்கு 25 கிலோ வீதம் மொத்தம் 17 டன் ரேஷன் அரிசி லாரியில் இருந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் அதை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக தலைமறைவாக உள்ள லாரியின் உரிமையாளரைத் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT