கிருஷ்ணகிரி

உலக மீன்வள தின விழா

22nd Nov 2019 07:54 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் உலக மீன்வள தின விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கிருஷ்ணகிரி பழைய பேட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உலக மீன்வள தினவிழாவையொட்டி, மீன்வளத் துறையின் சாா்பில் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டியானது பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியை பள்ளியின் தலைமையாசிரியா் வடிவேலு தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். மீன்வளத் துறை ஆய்வாளா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாணவா்களிடையே மீன் உணவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இந்தப் போட்டியானது நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 40 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT