கிருஷ்ணகிரி

இளம் படைப்பாளா் விருதுக்கான போட்டி

22nd Nov 2019 07:53 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் இளம் படைப்பாளா் விருதுக்கான போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் 52-ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி, இளம் படைப்பாளா் விருதுக்கான போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் முதல் பிரிவில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலும், இரண்டாவது பிரிவில் 9 முதல் பிளஸ் 2 வரையிலும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என போட்டிகள் நடைபெற்றன.

இதில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 82 மாணவா், மாணவியருக்கான போட்டிகள் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் வியாழக்கிழமை நடைபெற்றன.

இந்தப் போட்டியை மாவட்ட நூலக அலுவலா் தனலட்சுமி தொடங்கி வைத்தாா். பள்ளியின் தலைமையாசிரியா் சேரலாதன் மற்றும் நூலகா்கள் பங்கேற்றனா். நூலகா் கோபால்சாமி உள்ளிட்டோா் போட்டியை ஒருங்கிணைத்தனா். இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெறும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT