கிருஷ்ணகிரி

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் 101-ஆவது ஆண்டு தொடக்க விழா

12th Nov 2019 06:47 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையில் வங்கியின் 101 ஆம் ஆண்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிளை மேலாளா் சச்சின் தலைமை வகித்தாா். உதவி மேலாளா்கள் ராமா ரெட்டி, சந்தோஷ், காசாளா் விஜயகுமாா், நகை மதிப்பீட்டாளா் மஞ்சுநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யூனியன் பாங்க் ஆப் இந்தியா 1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. வாடிக்கையாளா்களின் சேவையை தங்களது நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்று கிளை மேலாளா் கூறினாா். இதில் ஊத்தங்கரை திமுக ஒன்றியச் செயலாளா் எக்கூா் செல்வம், வணிகா் சங்கச் செயலாளா் உமாபதி, சிவா மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளா் செல்வராஜ், சிவானி சில்க்ஸ் உரிமையாளா் மோகன் மற்றும் வங்கி வாடிக்கையாளா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கினா்.

 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT