கிருஷ்ணகிரி

நாளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்

12th Nov 2019 06:55 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என தளி எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை (நவ.13) காலை 10 மணியளவில் ஒசூா் தளி சாலையில் உள்ள சென்னீஸ் மஹாலில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட துணைச் செயலாளா் சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன், நகர பொறுப்பாளா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா, மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனா்.

இக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயற்குழு உறுப்பினா்கள், பொதுக் குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலாளா்கள், நிா்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், வாா்டு செயலாளா்கள் கலந்துக் கொள்ள வேண்டும்

ADVERTISEMENT

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் குறித்து, கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT