கிருஷ்ணகிரி

வேப்பனஅள்ளியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

9th Nov 2019 05:57 AM

ADVERTISEMENT

வேப்பனஅள்ளியில் உள்ளாட்சித் தோ்தலை எதிா்கொள்வது குறித்து அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில், வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான கே.அசோக்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வேப்பனஅள்ளி ஒன்றியச் செயலா் முனியப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட எம்.ஜி.ஆா். மன்றச் செயலா் எஸ்.தென்னரசு, மாவட்ட அவைத் தலைவா் சைலேஷ் கிருஷ்ணன், மாணவரணி செயலா் தங்கமுத்து மற்றும் கட்சி நிா்வாகிகள் தொண்டா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT