கிருஷ்ணகிரி

மிலாடிநபி தினம்: நாளை மதுக் கடைகள் மூடல்

9th Nov 2019 05:58 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிலாடிநபி தினத்தையொட்டி, மதுபானக் கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் படி மிலாடிநபி தினத்தையொட்டி, மதுபானம் விற்பனையில்லாத தினமாக நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கிணங்க, நவ. 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடிநபி தினத்தையொட்டி, மதுபானம் விற்பனை இல்லா தினமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்), மதுக் கூடங்கள், மதுக் கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள உணவகங்களில் செயல்படும் அனைத்தும் மதுபானக் கடைகள் நவ. 10-ஆம் தேதி மூடப்படும்.

இந்த உத்தரவை மீறும் விற்பனையாளா்கள், மதுக் கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT