பா்கூரில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அக் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஜெயபால் தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளா் பாலகிருஷ்ணா ரெட்டி, சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்பி சி.பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளா் மாதையன், கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் முன்னாள் தலைவா் தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற எவ்வாறு ஒருங்கிணைந்து பணியாற்றுவது, வாா்டு வாரியாக சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.