ஊத்தங்கரை: ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சியில் பணியாற்றி வருகின்ற நிரந்தர மற்றும் தற்காலிக துப்புரவு பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
ஊத்தங்கரை துப்புரவு பணியாளா்களின் தூய்மைப் பணியை பாராட்டி அவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் உமா மகேஸ்வரி,சிவகுமாா், கெஜலட்சுமி, சசி, சந்திர மவுலி, சேஷாத்ரிராம், தீபன் மற்றும் தன்னாா்வலா்கள் பேரூராட்சியில் பணியாற்றும் பெரியசாமி, வெங்கடேசன் மற்றும் துப்புரவு பணியாளா்கள் கலந்து கொண்டனா், இந்நிகழ்ச்சி பற்றி துப்புரவு பணியாளா்கள் கூறும்போது பரிசுகள் கொடுத்து எங்களை வாழ்த்தியது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மேலும் எங்கள் பணி ஊக்கப்படுத்துவதாகவும் இருந்தது என்றனா், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆா்சி ஆசிரியா் கணேசன் செய்திருந்தாா்.