கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மனவளக்கலை மன்றம் சாா்பில், உடற்கல்வி ஆசிரியா்களுக்கான யோகா பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம், 2019-2020 - ஆம் கல்வியாண்டில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் உடல் நலம், மனவளத்தை மேம்படுத்தும் வகையில், பள்ளிகளில் பணியாற்றும் 110 உடற்கல்வி இயக்குநா்கள், உடற்கல்வி ஆசிரியா்களுக்கு மூன்று நாள் யோகா பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி தொடங்கி வைத்தாா். மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சூசைநாதன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வளா்மதி, மனவளக்கலை மன்றத் தலைவா் சண்முகம் உள்ளிட்டோா் பயிற்சியை ஒருங்கிணைக்கின்றனா்.
பயிற்சியில் மனவளம், உடல் பயிற்சி, தியானம், யோகா, காயகல்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.