கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை அரசு அலுவலா்கள், வியாழக்கிழமை ஏற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சா்தாா் வல்லபபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை நாள் குறித்த உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா், தலைமை வகித்து, உறுதிமொழியை வாசிக்க, அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் அதைத் திரும்ப கூறி உறுதிமொழியை ஏற்றனா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராம மூா்த்தி, ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் சேதுராமலிங்கம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.