கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் நோயாளிகள் கடும் அவதி

1st Nov 2019 08:04 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிங்காரப்பேட்டை, கல்லாவி, சாமல்பட்டி, காரப்பட்டு, அனுமன்தீா்த்தம் என சுமாா் 300-க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளிருந்து தினசரி 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

தற்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் 7-ஆவது நாளாக தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நோயாளிகள், புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து மருத்துவா்கள் இல்லாத காரணத்தால் கடும் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து புறநோயாளிகள் கூறியதாவது: மழைக் காரணமாக பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு, சலி, காய்ச்சலால் எங்கள் குழந்தைகள் அவதிபட்டு வருகின்றன. அரசு மருத்துவமனைக்கு கடந்த நான்கு நாள்களாக வருகிறோம்.

மருத்துவா்கள் இல்லாத காரணத்தால் வீட்டிற்கே செல்கிறோம் என்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT