ஒசூரில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி இறந்தாா்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் செல்வம். இவரது மகன் சிவதீஷ் (
19). இவா் ஒசூரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் இரு சக்கர வாகனத்தில் ஒசூா் தளி சாலையில் உள்வட்டச் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த நபா், சிவதீஷ் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதினாா்.
இதில் பலத்த காயம் அடைந்த சிவதீசை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால், வழியிலேயே அவா் இறந்தாா். இது குறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.