அரசுப் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் விழா

தேவிர அள்ளி அரசுப் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. 


தேவிர அள்ளி அரசுப் பள்ளியில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. 
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள தேவிரஅள்ளி அரசுப் பள்ளி அரசு உயர் நிலைப் பள்ளியாக கடந்த  4.8.2017 ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி முதல் ஆண்டிலேயே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் முத்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கினார்.
இதுகுறித்து பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சிக் குழு, பள்ளி மேலாண்மைக் குழு ஆகியவை இணைந்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவித்தன. நிகழ்ச்சியில், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் முனியன், துணைத் தலைவர் முருகேசன், பள்ளி வளர்ச்சிக் குழு நிர்வாகிகள் சம்பத், பழனி, முருகையன், கதிர்வேல், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் ரேணுகா சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேவிபிரசாத் நூற்றாண்டு விழா கருத்தரங்குதருமபுரி, மே 4:  தருமபுரியில் தத்துவ அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது. 
அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு பேராசிரியர் இ.பி.பெருமாள் தலைமை வகித்தார். தகடூர் புத்தக பேரவைத் தலைவர் இரா.சிசுபாலன் வரவேற்று பேசினார். ஆய்வாளர்கள் த.பார்த்திபன், ஆ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கருத்தரங்கில், வரலாற்றில் தகடூர் நாடு என்ற நூலை முன்னாள் எம்.பி. இரா.செந்தில் வெளியிட்டார். செப்பேடு இதழ் நிறுவனர் அறம்.கிருஷ்ணன், மொழி பெயர்ப்பாளர் அ.வெ.சாமிக்கண்ணு  ஆகியோர் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
 நிகழ்ச்சியில் தொல்லியல் அறிஞர் பூங்குன்றன், ஆய்வு மையத்தின் செயலர் தி.சுப்பிரமணியன் ஆய்வாளர் காமராசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com