கிருஷ்ணகிரி

இரு வேறு விபத்துகளில் 2 பேர் பலி

31st Jul 2019 08:48 AM

ADVERTISEMENT

சூளகிரி பகுதியில் நடந்த இருவேறு விபத்துகளில் கூலித் தொழிலாளி உள்பட இருவர் உயிரிழந்தனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், சானமாவு அடுத்த பென்னிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (40). கூலித் தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த குஞ்சப்பா (55) என்பவரும் சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அஞ்சல் அலுவலகம் அருகே மொபெட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அணுகு சாலைக்கு திரும்பிய அரசு பேருந்து, மொபெட் மீது மோதியது. இதில் மொபெட்டை ஓட்டி வந்த அய்யப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குஞ்சப்பா, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 கார் விபத்தில்...
 ஒசூரை அடுத்த மத்திகிரி அருகே உள்ள கர்னுôர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (28). இவரும் அவரது உறவினர்கள் லாவண்யா ( 23), லதா (23) ஆகியோரும் கடந்த திங்கள்கிழமை கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். சூளகிரி அடுத்த சுண்டகிரி அருகே சென்ற போது சாலைத் தடுப்பைத் தாண்டி அடுத்த சாலைக்கு கார் சென்றது. அப்போது கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்டன. இதில் மஞ்சுநாத், லாவண்யா, லதா ஆகிய மூவரும் காயமடைந்தனர். அவர்களை மீட்டு அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் மஞ்சுநாத் உயிரிழந்தார். இந்த இரண்டு வழக்குகள் குறித்தும் சூளகிரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT