கிருஷ்ணகிரி

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ முகாம்

29th Jul 2019 08:33 AM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வட்டார அளவிலான 1 முதல் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் அண்மையில்  நடைபெற்றது. 
பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட  உதவி  திட்ட அலுவலர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசோதனை செய்து, அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர் மாணவர்களுக்கு சக்கர நாற்காலி மற்றும் காது கேளாதோர்களுக்கான கருவிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த முகாமில் 248 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சுதாகரன், அன்புவளவன், சின்னபள்ளத்தூர் பள்ளித் தலைமை ஆசிரியர் மா.பழனி, ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT