கிருஷ்ணகிரி

நூலக உறுப்பினரான அரசுக் கல்லூரி மாணவிகள்

29th Jul 2019 08:32 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்ட நூலகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் நூலக உறுப்பினராக  அண்மையில் இணைந்தனர்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில் "வாசகர் இயக்கம்-2020' விழிப்புணர்வு நிகழ்ச்சி, கிருஷ்ணகிரி மாவட்ட நூலகம் சார்பில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, தமிழ் துறைத் தலைவர் சௌ.கீதா, வாசகர் வட்டத் துணைத் தலைவர் ஜெயந்தி ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள வாசிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும். நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பல நூல்கள் உள்ளன. இவற்றை படிப்பதன் மூலம் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்நோக்கலாம். படிப்பு மட்டுமே நம்மை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும். எனவே, மாணவிகள் அனைவரும், கிருஷ்ணகிரி நூலகத்துக்கு வந்து, பயன்பெற வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் மாவட்ட மைய நூலகமும் இணைந்து மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. மேலும், கல்லூரியைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவர்கள், பேராசிரியர்கள் நூலக உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT