கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளியில் விதைப் பந்து தயாரிக்கும் நிகழ்ச்சி

29th Jul 2019 08:33 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளியில் வேளாண் துறை சார்பில், நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மாணவர்கள் விதைப் பந்து தயாரிப்பு நிகழ்ச்சி  அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வேளாண் துறை இயக்குநர் புவனேஸ்வரி கலந்துகொண்டு, பள்ளி மாணவர்களிடம், நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்தும், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம், விதைப் பந்துகள் தயாரிக்கும் முறை மற்றும் அவற்றினை எவ்வாறு நட வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறினார். பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) தமிழ்வேல் மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம், மழை நீர் சேகரிப்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்யலாம் என்றும்  மாணவர்களிடம் கூறினார்.
இதில், மாணவர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதைப் பந்துகளை தயாரித்தனர். இதில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் லட்சுமணன், முதுநிலை ஆசிரியர் சரவணன், தமிழாசிரியர் பெருமாள், புகழேந்தி, வேளாண் பிரிவு மாணவர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் செய்திருந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT