கிருஷ்ணகிரி

ராயக்கோட்டையில் பொறியாளர் கொலை

22nd Jul 2019 10:30 AM

ADVERTISEMENT

ராயக்கோட்டையில் பொறியாளரைக் கொலை செய்து தண்டவாளத்தில் வீசி சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சையத் தன்வீர் அகமத் (35). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்த போது, அதே கல்லூரியில் படித்து வந்த மதுரையைச் சேர்ந்த ஷில்பா (32) என்பவருடன் காதல் ஏற்பட்டு இருவரும் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.ஷில்பாவின் தாய் பிரிக்கெட் சத்தியராணி ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். 
அயர்லாந்தில் மனைவியுடன் தங்கி பணிபுரிந்து வந்த சையத் தன்வர் அகமத், மனைவியின் பிரசவத்துக்காக ராயக்கோட்டைக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை  பெங்களூருக்கு சென்று வருவதாக தனது மனைவி ஷில்பாவிடம் கூறிவிட்டு சென்ற சையத் தன்வீர் வீட்டிற்கு திரும்பி வராததையடுத்து, ஜூலை 13-ஆம் தேதி ராயக்கோட்டை காவல் நிலையத்தில் ஷில்பா புகார் அளித்தார்.
அதன் பேரில் காவல் ஆய்வாளர் சிவலிங்கம், உதவி காவல் ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சையத் தன்வீர் அகமத் பெங்களூரில் சொத்து ஒன்றை முடிப்பது தொடர்பாக சென்றதாகவும், பின்னர் அவர் மாயமானதும் தெரிய வந்தது. இதனிடையே, ராயக்கோட்டையில் ரயில் நிலையம் அருகே சாதேகொள்ளு மாரியம்மன் கோயில் பகுதியில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சையத் தன்வீர் அகமத்தின் உடலை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT