கிருஷ்ணகிரி

டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி

22nd Jul 2019 10:32 AM

ADVERTISEMENT

வேப்பனஅள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
வேப்பனஅள்ளி அருகே உள்ள ஜெய்நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார்(22). டிராக்டர் ஓட்டுநரான இவர், தாசிரிப்பள்ளியிலிருந்து ஜெய்நகர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை டிராக்டரை ஓட்டிச் சென்றார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் பயணம் செய்தனர். ராமசந்திரம் பகுதியில் திடீரென ஓட்டநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ஜெயகுமார் நிகழ்விடத்திலே உயிரிழந்தார். 
மேலும், டிராக்டரில் சென்று கொண்டிருந்த  முனியப்பன் உள்பட 4 பெண்கள் காயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து வேப்பனஅள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT