ஊத்தங்கரையில் தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை அடுத்த கொண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன் (50). இவர் வேலூரில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ராணி (47), மகேஸ்வரி (45) என இரு மனைவிகளும், இரு மகள்களும் உள்ளனர். இவர் நீண்ட நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் விரக்தியடைந்த மாயக் கண்ணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு உறவினர்கள் தகவல் தெரித்துள்ளனர். இதையடுத்து ஊத்தங்கரை காவல் நிலைய ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாயக்கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.