கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் பிரச்னை அதிகரித்துள்ளதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
கல்லாவி,வீரனகுப்பம்,வேளம்பட்டி,வெள்ளாளப்பட்டி,பச்சினாம்பட்டி, மஞ்சமேடு, மேட்டுதாங்கள்,கோலிநாய்கன்பட்டி, செட்டிப்பட்டி,சோலையூர், பெரியகொட்டகுளம், செங்கல்நீர்பட்டி, சூலகரை, மேட்டு சூலகரை,ஒன்னகரை,காட்டுப்பட்டி, சந்திரப்பட்டி,வெள்ளிமலை,வேடப்பட்டி,பெருமாள் நாய்க்கன்பட்டி மற்றும் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரம்ப சுகாதார வளாகத்தில் கடந்த ஒரு மாத காலமாக போதிய தண்ணீர் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினசரி 150 முதல் 200 நோயாளிகள் வரை வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர், உள் நோயாளிகள், கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள் என மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்,
இவர்கள் பயன்படுத்த கழிவறைகள் இருந்தும் தண்ணீர் இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க திறந்த வெளியில் செல்வதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து கல்லாவி மருத்துவ அலுவலர் பாலாஜி கனகசபை ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தண்ணீர் கோரி மனு
கொடுத்துள்ளார்.