கிருஷ்ணகிரி

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

12th Jul 2019 09:36 AM

ADVERTISEMENT

மாணவியைக் கிண்டல் செய்த இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரையை அடுத்த கீழ் மத்தூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளிக்கு சென்று வரும் போது, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மாணவியிடம் அவர் சில்மிஷம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் தாயார் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார். அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளர்  குமரன் விசாரணை செய்து கோவிந்தராஜ் மகன் வல்லரசை (19) போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT