கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் நீர் மேலாண்மைக் குழு உறுப்பினர் ஆய்வு

12th Jul 2019 09:36 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை ஒன்றியத்தில் ஜல் சக்தி அபியான் நீர் மேலாண்மைக் குழு உறுப்பினர் வஜ்ஜெவ் தலைமையில் வியாழக்கிழமை மழைநீர் சேகரிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஊத்தங்கரை பேரூராட்சிக்குள்பட்ட திருமணக் கூடத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை பார்வையிட்டார். தொடர்ந்து வேளாண் துறை அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியை ஆய்வு மேற்கொண்டார்.
பிறகு மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைபடி, மிட்டப்பள்ளி ஊராட்சி சின்னதள்ளப்பாடி கிராமத்தில் உள்ள கூடப்பட்டான் ஏரி அருகே உள்ள குளம் மற்றும் ஜவ்வாது மலையில் இருந்து வரும் நீர்வரத்துக் கால்வாயை தூர்வாரும் பணிக்கு பூமிபூஜை நடைபெற்றது.
ஊத்தங்கரை அதிமுக ஒன்றியச் செயலர் ஏசி.தேவேந்திரன் தனது சொந்த செலவில் கால்வாய், குளம் தூர்வாரும் பணியை செய்து வருகிறார். இதில், மாவட்ட திட்ட அலுவலர் ஊராட்சி சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்னபூரணி, திட்டம்  அசோகன், பேரூராட்சி செயல் அலுவலர் சேம்ஸ் கிங்ஸ்டன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT