கிருஷ்ணகிரி

முதல்போக பாசனத்துக்கு கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

6th Jul 2019 09:33 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு வியாழக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுப்பணித் துறையினரிடம் விவசாயிகள் கோரினர். இதனை ஏற்று, கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்கு பொதுப் பணித் துறையினர் தண்ணீர் திறந்துவிட்டனர். 
அதன்படி, அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 38.25 கன அடி தண்ணீர் உள்ளது. அணையின் வலதுபுறக் கால்வாய் மூலம் வினாடிக்கு 50 கன அடி வீதமும், இடது புறக் கால்வாய் மூலம் வினாடிக்கு 5 கன அடி என மொத்தம் 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஅள்ளி, தளிஅள்ளி, மாரிசெட்டிஅள்ளி, காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரம், எர்ரஅள்ளி, நாகோஜனஅள்ளி, பாலேகுளி, ஜணப்பரஅள்ளி, பையூர் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதி பெறும். தொடர்ந்து 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்தானது ஜூலை 5-ஆம் தேதி வினாடிக்கு 12 கன அடியாக இருந்தது. பருவ மழையைப் பொருத்தே, அணையிலிருந்து தண்ணீர் திறப்பின் அளவு மாறுபடும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT