கிருஷ்ணகிரி

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் நேரடிச் சேர்க்கை

6th Jul 2019 09:34 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் ஆகிய பொறியியல் டிப்ளமோ படிப்புகளுக்கான முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு நேரடிச் சேர்க்கை நடைபெறுகிறது.
தற்போது இரண்டாமாண்டு சிவில் பிரிவில் 3 காலியிடங்களுக்கான நேரடிச் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 வகுப்பு கணிதம் அல்லது அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர் கல்லூரி முதல்வரை நேரில் சந்தித்து ஜூலை 12-க்குள் சேர்க்கை பெறலாம். முதலாமாண்டில் சிவில்-40, எலக்ட்ரிக்கல்-2 (பிசி-1, எஸ்.டி-1), எலக்ட்ரானிக்ஸ்-19 மற்றும் கம்ப்யூட்டர் துறையில்-23 காலியிடங்களும் உள்ளன. எனவே, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களும் ஜூலை 19-ஆம் தேதி வரை இக்கல்லூரிஅலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பித்து பயனடையலாம். ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வில் வருகை தராத மாணவ-மாணவியரும் நேரடிச் சேர்க்கை பெறலாம். மேலும், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் தற்போதுள்ள காலியிடங்களில் மட்டுமே நேரடிச் சேர்க்கை வழங்கப்படும்.    

ADVERTISEMENT
ADVERTISEMENT