கிருஷ்ணகிரி

முதன்மை நிலை விளையாட்டு மைய காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

4th Jul 2019 09:49 AM

ADVERTISEMENT

முதன்மை  நிலை விளையாட்டு மையங்களில் காலியாக உள்ள 23 இடங்களில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 9-ஆம் தேதி கடைசி நாள் என கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2019 - 2020 -ஆம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள 23 இடங்களுக்கு இரண்டாம் கட்டமாக மாநில அளவிலான தேர்வு,  ஜூலை 10-ஆம் தேதி காலை 8 மணிக்கு சென்னை ஜவாஹர்லால்  நேரு விலையாட்டு அரங்கில் தடகளம்  (மாணவியர்),  மேசைப்பந்து (மாணவியர்), ஜிம்னாஸ்டிக்ஸ்(மாணவர்),  நீச்சல் (இருபாலருக்கும்),  சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் டென்னிஸ் (மாணவர்), சென்னை நேரு பூங்கா விளையாட்டு வளாகத்தில் இறகுப் பந்து(மாணவர்) விளையாட்டிலும் நடத்தப்பட உள்ளசு. 
சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம், சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் இறகுப் பந்து விளையாட்டும், திருச்சி (ஸ்ரீரங்கம்)  விளையாட்டு விடுதியில் இறகுப் பந்து விளையாட்டும், திருநெல்வேலி விளையாட்டு விடுதியில் ஜிம்னாஸ்டிக்ஸ்,  நீச்சல், டென்னிஸ் ஆகிய விளையாட்டும் கற்பிக்கப்படும். இதேபோல சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தடகளம்,  ஈரோடு விளையாட்டு விடுதியில் மேசைப் பந்து,  நீச்சல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த  முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் 2019 - 2020 -ஆம்  ஆண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் படிவம் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்  என்னும் இணையதளம் மூலம் ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். சென்னையில் ஜூலை 10-ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் மாநிலத் தேர்வில் நேரில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT