கிருஷ்ணகிரி

சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

4th Jul 2019 09:50 AM

ADVERTISEMENT

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவர் கே.தேவன் தலைமை வகித்தார். பொருளாளர் சுபாஷ் சந்திரபோஷ் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின்போது, சாலைப் பணியாளர்களைத் தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்தும், நெடுஞ்சாலைத் துறையில் முதன்மை இயக்குநர் பொறுப்புக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கருப்புத் துணியால் முகங்களை மறைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT