கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி, பர்கூர் அரசு மகளிர் கல்லூரிகளில் இன்று கலந்தாய்வு

4th Jul 2019 09:50 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி, பர்கூர் அரசு மகளிர் கலைக் கல்லூரிகளில் முதுகலை பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2019-2020-ஆம் ஆண்டுக்கான பட்டமேற்படிப்பு முதலாமாண்டு (எம்.ஏ.-தமிழ், எம்.ஏ.-ஆங்கிலம், எம்.எஸ்ஸி - கணிதம், எம்.எஸ்ஸி-கணினி அறிவியல், எம்.எஸ்ஸி - உயிர் வேதியியல், எம்.எஸ்ஸி-வேதியியல், எம்.காம்) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது எனத்
தெரிவித்தார்.
பர்கூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சூ.ச. ரோஸ் மேரி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தக் கல்லூரியில் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான கலந்தாய்வு மற்றும் இளங்கலை பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு ஜூலை 4-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு இதுவரையில் விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத தகுதியான மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT