கிருஷ்ணகிரி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

4th Jul 2019 09:48 AM

ADVERTISEMENT

பென்னாகரம் அருகே சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வு, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, விளையாட்டு, கல்வி உள்ளிட்டவற்றில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு, பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாதவன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பென்னாகரம் வட்டாரக் கல்வி அலுவலர் அன்புவளவன் மற்றும் இந்திய ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் சார்பில் தருமபுரி கிளை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி விந்தியா, மாணவர் ஹரிஹரன் ஆகியோரைப் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
பின்னர் பள்ளியில் கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் முகிலா, சூர்யா, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சந்தியா, சிவேஸ்வரி ஆறாம் வகுப்பு  மாணவர்கள்  சுரேஷ், காவியா, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீதர், ஷர்மிளா உள்ளிட்ட மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் எல்.ஐ.சி. கிளை மேலாளர் அனிஷ்குமார், முகவர் பச்சியப்பன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT