கிருஷ்ணகிரி

அனைத்து நாய் இனங்களுக்கும் ஜூலை 7-இல் வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி

4th Jul 2019 09:49 AM

ADVERTISEMENT

அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் நாய் கண்காட்சியில் அனைத்து நாய் இனங்களுக்கும் வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் ம. மனோகரன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரியில் கடந்த 16-ஆம் தேதி முதல் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 
இத் துறை சார்பில் ஜூலை 7-ஆம் தேதி, மதியம் 1 முதல் இரவு 7 மணி வரையில் நாய் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த நாய் கண்காட்சியில் பல இன நாய்கள் பங்கு பெற உள்ளன. இதில் சிறந்த நாய்களை பராமரிக்கும் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும். 
இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் அனைத்து இன நாய்களுக்கு இலவசமாக வெறிநாய் கடிக்கான தடுப்பூசி, கால்நடை உதவி மருத்துவரால் போடப்படும். எனவே, செல்ல பிராணிகளை வளர்ப்போர், தங்களது செல்லப் பிராணியை இந்த மாங்கனி கண்காட்சியில் பங்கேற்க செய்ய வேண்டும் என அதில் அவர் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT