கிருஷ்ணகிரி

விலையில்லா மடிக் கணினிகள் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

2nd Jul 2019 08:45 AM

ADVERTISEMENT

விலையில்லா மடிக் கணினிகள் கோரி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட  ஊத்தங்கரை அரசு ஆண்கள்  மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவர்கள்  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 2017 - 18 ஆம் கல்வியாண்டில்  பிளஸ் 2  பயின்ற மாணவர்களுக்கு  தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படாமல்  நிலுவையில் உள்ளது. 
இந்த நிலையில் 2018  - 19 ஆம் கல்வியாண்டில் பயின்றவர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள்  வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து  தகவலறிந்து வந்த முன்னாள் மாணவர்கள் கடந்த ஆண்டு பயின்ற தங்களுக்கு மடிக்கணினி வழங்காமல்,  தங்களுக்குப் பின்னால் படித்தவர்களுக்கு  மடிக்கணினி வழங்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினரும், ஊத்தங்கரை போலீஸாரும் பேச்சுவார்த்தை நடத்தி முன்னாள் மாணவர்களை அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியைத் தொடர்பு கொண்டபோது,  "இன்னும் இரண்டு மாதங்களில் முன்னாள் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும்ட என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT