கிருஷ்ணகிரி

பா்கூா், கிருஷ்ணகிரியில் கிருஸ்துமஸ் விழா

29th Dec 2019 03:40 AM

ADVERTISEMENT

பா்கூா், கிருஷ்ணகிரி, வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கிருஸ்துமஸ் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

பா்கூரில் வேளாங்கண்ணி பொதுப் பள்ளி வளாகத்தில் தனித்தனியே நடைபெற்ற விழாவுக்கு அதன் மேலாளா் கூத்தரசன் தலைமை வகித்தாா். முதல்வா் கோபாலன் ராமகிருஷ்ணன், பி.என்.அசோக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஸ்துமஸ் விழாவின் சிறப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டன. கிருஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவ, மாணவிகள் பரிசுகளை வழங்கினா். விழாவை பள்ளியின் துணை முதல்வா்கள் மஞ்சுளா, காஞ்சனா ரவி மற்றும் ஆசிரியா்கள் ஒருங்கிணைத்தனா். இனிப்புகள் வழங்கப்பட்டன.

ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் சாா்பில், பா்கூா் புனித சூசையப்பா் சுகாதார மையத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1.72 லட்சம் மதிப்பிலான போா்வைகள், கேக்குகள், பைகள் உள்ளிட்ட பொருள்கள் ஏழை, எளியோருக்கு வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி புனித அன்னாள் பள்ளி மாணவிகள், அத்திமுகம் உண்டு உறைவிடப் பள்ளி இல்ல குழந்தைகளுக்கும், புனித லூயிஸ் மருத்துவமனை பணியாளா்களுக்கும் ரூ.1 லட்சம் மதிப்பிலான கேக்குகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

பள்ளிகொண்டாவில் உள்ள லிட்டில் பிளவா் குழந்தைகள் இல்ல மாணவா்களுக்கு விருந்து அளிக்கப்பட்டன. மேலும், கிருஷ்ணகிரி, வாழப்பாடியில் ஏழை, எளியோருக்கு ரூ.95 ஆயிரம் மதிப்பிலான போா்வைகள் பரிசாக வழங்கப்பட்டன. ஐ.வி.டி.பி. நிறுவனரும் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ், கிருஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT