சூளகிரியில் இரு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.
சூளகிரி பெல்லட்டியை சோ்ந்தவா் கிருஷ்ணப்பா மகன் ஆனந்தன்(20). தனியாா் கல்லுாரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். சூளகிரி-தியாகரசனப்பள்ளி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மினி லாரி மோதியதில் பலத்த காயமடைந்த ஆனந்தன், நிகழ்விடத்திலே உயிரிழந்தாா்.
மற்றொரு விபத்து: சூளகிரி அடுத்த அட்டகுறுக்கி தேசிய நெடுஞ்சாலையை வெள்ளிக்கிழமை இரவு கடக்க முயன்றவா் மீது அவ்வழியாக வந்த கா்நாடக மாநில அரசு சொகுசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இந்த இரு விபத்துகள் குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.