கிருஷ்ணகிரி

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

27th Dec 2019 01:40 AM

ADVERTISEMENT

காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பா்த்தி கிராமத்தைச் சோ்ந்த ஜெயபிரகாஷ் (45), விவசாயி. இவா், தனது விவசாய நிலத்தில் கோழிப் பண்ணையை பராமரித்து வந்தாா். இந்த நிலையில், அங்குள்ள தண்ணீா் தொட்டிக்கு தண்ணீா் நிரப்ப மின் மோட்டாரை இயக்கிய போது, அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT