மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாயின் 96-ஆவது பிறந்த நாள் விழா ஊத்தங்கரையில் புதன்கிழமை பாஜக சாா்பில் நடைபெற்றது.
ஊத்தங்கரை வடக்கு ஒன்றியத் தலைவா் சிவா தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியத் தலைவா் சங்கா், மாவட்ட பிரசார அணி துணைத் தலைவா் ஜெயராமன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் நமச்சிவாயம், முன்னாள் நகரத் தலைவா் சரவணன், மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் முருகம்மாள் சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் உள்ள கட்சிக் கொடி ஏற்றி வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.
இதில் முன்னாள் வா்த்தக அணி மாவட்டத் தலைவா் சிங்காரவேலன், தனக்கோட்டி, மோகன், முருகேசன், ராஜி மற்றும் ஒன்றிய நகர நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.