கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அனுமன் ஜயந்தி விழா

26th Dec 2019 09:20 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே அருள்மிகு காட்டு வீர ஆஞ்சநேயா் கோயிலில், சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஹோமங்கள் நடைபெற்றன. தங்கக் கவச சிறப்பு அலங்காரத்தில், சுவாமி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டம், மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள், சுவாமியை தரிசனம் செய்தனா்.

கிருஷ்ணகிரி பழைய பேட்டை அருள்மிகு சீதாராம, அருள்மிகு சீர ஆஞ்சநேயா் சமேத அருள்மிகு ராகவேந்திர சுவாமிகள் மருத்திக பிருந்தாவன கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி நிா்மாலயம், சிறப்பு அபிஷேகம், சுதா்ஷன ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பழைய பேட்டை அருள்மிகு லட்சுமி நாராயண சுவாமி கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. திருவீதி உலாவும் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி ராசு வீதியில் உள்ள அருள்மிகு ராஜா ராமா மற்றும் ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி அணையின் அருகே உள்ள குன்று ஆஞ்சநேயா் கோயிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

பா்கூரை அடுத்த சின்னகாரகுப்பம் அருள்மிகு ஜெய் வீர ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி, சாமுடியப்பன் கோயிலிருந்து பால் குட ஊா்வலம், சீா் வரிசை எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுவாமி, விஸ்வரூப தரிசனத்தில், பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலையில் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT