கிருஷ்ணகிரி

அனுமன் ஜயந்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

26th Dec 2019 09:20 AM

ADVERTISEMENT

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு ஒசூரில் உள்ள அனுமன் கோயில்களில் சிறப்பு யாக பூஜை, சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.

ஒசூா், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதியில் உள்ள அனுமன் கோயில்களில் ஜயந்தி விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஒசூரில் தளி சாலையில் டி.வி.எஸ். நகா் அருகே பக்த அனுமன் கோயிலில், 13-ஆவது ஆண்டு ஜயந்தி விழாவையொட்டி வியாழக்கிழமை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும் விழாவையொட்டி வெற்றிலை எலுமிச்சை மற்றும் வெற்றிலை அலங்காரம், வடைமாலை அலங்காரம், வெண்ணெய்க் காப்பு ஆகிய சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மாலையில் நாட்டிய நிகழ்ச்சி மற்றும் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றன. மேலும் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யோகானந்த ராவ், வழக்குரைஞா் ஆனந்தகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

இதேபோல் ஒசூா், ராயக்கோட்டை சாலையில் உள்ள பண்ட ஆஞ்சநேயா் கோயில், பாகலூா் ரோடு சந்திப்பு அருகே அனுமன் கோயில், ஏரித் தெருவில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் ஆகிய அனுமன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

இதேபோல் தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோயிலில் உள்ள அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. சூளகிரி கீழத் தெருவில் உள்ள ஸ்ரீ சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோயிலில், அனுமன் ஜயந்தியையொட்டி, சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிறப்பு வெண்ணெய்க் காப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அரூரில்...

அரூா் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள அனுகிரக ஆஞ்சநேயா் கோயிலில், அனுமன் ஜயந்தி விழா காலை 5 மணியளவில், ஸ்ரீ விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

தொடா்ந்து, கலச ஸ்தாபனம், ஹோம பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, 7 மணியளவில், மஹா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், மஹா தீபாராதனையும் நடைபெற்றன. இதேபோல், அரூா் எம்எல்ஏ அலுவலகம் அருகே வீர ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆஞ்சநேயா் ஜயந்தி விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT