தந்தை பெரியாரின் 46 -ஆவது நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, ஒசூா் சமத்துவபுரத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தளி சட்டப்பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ஏ. சத்யா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், தி.க. சாா்பில் மாவட்டத் தலைவா் வனவேந்தன் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில், மேற்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவா் யுவராஜ், ஒசூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் மாதேஸ்வரன் மற்றும் தி.க. பொதுக்குழு உறுப்பினா் துக்காராம், மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, மாணவரணி தலைவா் வெற்றி, மகளிரணி அமைப்பாளா் கண்மணி மற்றும் நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.